'பிக்பாஸ் 2' பிரச்சனையில் தலையிட்ட குஷ்பு

  • IndiaGlitz, [Monday,July 02 2018]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் முதல் நபராக நேற்று மமதிசாரி வெளியேறியுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பதால் கமல் உள்பட 41 பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பணியில் இருந்து விலகுவார்கள் என்று பெப்சி அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் குஷ்பு தலையிட்டு விஜய் டிவி மற்றும் பெப்சி அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 50% பணிகளை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்க 'பிக்பாஸ் 2' தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சுமார் 200 பெப்சி தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் வேலைகிடைக்கும். இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்த குஷ்புவுக்கு பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார்.

More News

சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'

கடந்த சில நாட்களாக தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரத்குமார் நடித்து வரும் படம் ஒன்றுக்கு 'வேளச்சேரி துப்பாக்கிசூடு'

பிக்பாஸ் 2: செண்ட்ராயன் அடுத்த தலைவரா? வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 பேர்களில் முதல் நபராக நேற்று வெளியேறினார் மமதி. இவர் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்ததுதான்.

'இரும்புத்திரை' படத்தின் வசூல் இத்தனை கோடியா?

விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய 'இரும்புத்திரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஷாலின் படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூலை பெற்ற படம்

இரண்டாவது வாரத்திலும் களைகட்டிய 'டிக் டிக் டிக்' வசூல்

ஜெயம் ரவி நடிப்பில் சக்தி செள்நதிரராஜன் இயக்கத்தில் டி.இமான் இசையில் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான

சசிகுமாரின் 'அசுரவதம்' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

சசிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'அசுரவதம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் சராசரியாக இருந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.