'பிக்பாஸ் 2' பிரச்சனையில் தலையிட்ட குஷ்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியின் முதல் நபராக நேற்று மமதிசாரி வெளியேறியுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் இந்த நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் பணிபுரியும் டெக்னீஷியன்கள் பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்தவர்களாக இருப்பதால் கமல் உள்பட 41 பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பணியில் இருந்து விலகுவார்கள் என்று பெப்சி அமைப்பின் தலைவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் குஷ்பு தலையிட்டு விஜய் டிவி மற்றும் பெப்சி அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 50% பணிகளை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்க 'பிக்பாஸ் 2' தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சுமார் 200 பெப்சி தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று மாதங்கள் வேலைகிடைக்கும். இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்த குஷ்புவுக்கு பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நன்றி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com