என் ஹீரோவை பார்த்துவிட்டேன், 33 வருட கனவு நிறைவேறியது: குஷ்பு

  • IndiaGlitz, [Monday,September 18 2017]

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேரில் பார்க்க தமிழகத்தில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கும் நிலையில் கடந்த 33 வருடங்களாக நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்த தனது கனவு ஹீரோவை பார்த்துவிட்டதாக குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி. ரவிசாஸ்திரியை நேரில் சந்தித்தை புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள குஷ்பு, 'என் கனவு நனவாகிவிட்டது. என்னுடைய ஹீரோவை நேரில் சந்திக்க 33 வருடம் காத்திருந்தேன். இன்று நிறைவேறிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியபோதே அவருக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.