என்ன நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்டாரா? இணையத்தில் வைரலாகும் ஒரு தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை குஷ்பு தேசிய கட்சியான பாஜகவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் அவர் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அவர் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது.
காரணம் நடிகை குஷ்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பில் பங்கு வகித்தார். அத்தருணத்தில் பாஜகவின் கொள்கைகளையும் அக்கட்சி சார்ந்த சில தலைவர்களையும் அவர் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த விமர்சனங்கள் தற்போது தான் பங்கு வகித்து வரும் பாஜகவின் முக்கியப் பிரமுகர்களுக்கு ஒருவேளை எரிச்சலை ஏற்படுத்தலாம் என கருதிய நடிகை குஷ்பு அத்தகைய தலைவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மன்னிப்பு கோரி வருகிறாராம்.
அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வாத்தையில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக பாமகவிற்கு 23 தொகுதிகளை வழங்கிய அதிமுக, பாஜகவிற்கு எவ்வளவு தொகுதிகளை வழங்கலாம் என பரிசீலித்து வருகிறது. இதற்கான முடிவு இன்று வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படும் நடிகை குஷ்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும் “அது கட்சி ரீதியான கருத்துதான், தனிப்பட்ட கசப்பு எதுவும் இல்லை“ என்றும் விளக்கம் அளித்து உள்ளார். இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் “நீங்கள் டிவிட்டரில் விமர்சித்ததே எனக்கு தெரியாது. அரசியலில் இதெல்லாம் சாதாராணம்“ எனக் கூறி நடிகை குஷ்புவின் நட்புக் கோரிக்கைக்கு தாராளமாக வரவேற்பு அளித்தாராம். இத்தகவல் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com