உடல்எடையைக் குறைக்க வேண்டுமா? நடிகை குஷ்புவின் பெஸ்ட் அட்வைஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் ஒட்டுமொத்த மனித வாழ்க்கையே தலைகீழாக மாறிப்போய்விட்டது. ஆனால் இந்த நேரத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு கிட்டத்தட்ட தனது 20 கிலோ எடையை குறைத்து இருக்கிறார். மேலும் தன்னைப்போலவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல உக்தியையும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை குஷ்பு. ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்த இவர் தற்போது ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்துவருகிறார். மேலும் அரசியலில் பங்கு வகித்துவரும் இவர் ஒரு பிசியான வாழ்க்கையே வாழ்ந்துவருகிறார். இருந்தாலும் தனது ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்ட நடிகை குஷ்பு தீவிர வொர்க் அவுட் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது உடல்எடையை 20 கிலோ அளவிற்கு குறைந்து இருக்கிறார்.
இதனால் படு ஃஸ்லிம்மாக காட்சிதரும் நடிகை குஷ்பு அவ்வபோது மார்டன் உடைகளை அணிந்துகொண்டு சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை தனது இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், வொர்க் அவுட்டை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடாதீர்கள். நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்டான தோற்றத்தில் இருப்பதற்கான காரணங்களைத் தேடுங்கள். கொரோனா நேரத்தில் நான் இதுபோன்ற ஒரு யுக்தியைப் பயன்படுத்தினேன். இது மெதுவாக பலனளித்தது. ஆனால் தற்போது உடல்எடையை குறைத்து நல்ல ஆரோக்கியத்துடன் வலம் வருகிறேன் எனத் தெரிவித்து உள்ளார்.
நடிகை குஷ்பு கூறியிருக்கும் இந்த வழிமுறை தற்போது இளைஞர்கள் பலருக்கும் நல்ல உத்வேகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வொர்க்அவுட், நடைபயிற்சி செய்யாமல் இருப்பதற்கு காரணங்களை தேடுவதை விட்டுவிட்டு ஃபிட்டாக இருப்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com