தவறாக நடக்க முயற்சி: இளைஞரின் கன்னத்தில் பளாரென அறைந்த குஷ்பு!

பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தன்னிடம் தவறாக நடக்க முயற இளைஞர் ஒருவரை பளார் பளாரென அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூர் மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்துவிட்டு அவர் மேடையில் இருந்து தன்னுடைய காரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த இளைஞர் ஒருவர் குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.

உடனே ஆத்திரத்துடன் பின்னால் திரும்பிய குஷ்பு, அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார். பின்னர் அந்த இளைஞரை போலீசார் அப்புறப்ப்படுத்தியவுடன் குஷ்பு தனது காரில் ஏறி சென்றார். பொது இடத்தில் குஷ்பு ஒரு இளைஞரை அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.