கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க: நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த குஷ்பு!

  • IndiaGlitz, [Thursday,November 19 2020]

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு சென்ற கார் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் இந்த விபத்து குறித்து கேலி செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்த நெட்டிசனுக்கு ’கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க’ என்று குஷ்பு சாட்டையடி பதில் கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக நடிகை குஷ்பு, சென்னையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தபோது செங்கல்பட்டு அருகே திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சதி இருக்கலாம் என குஷ்பு உள்பட பாஜக தலைவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்

இந்த நிலையில் இந்த விபத்தே ஒரு செட்டப் என்றும் பிரபலமாவதற்கு குஷ்புவே இந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் சிலர் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து நெட்டிசன் ஒருவர் குஷ்புவின் கார் விபத்துக்குள்ளான புகைப்படத்தை பதிவு செய்து, காரின் முன்பக்கம் ஒரு போட்டோ, பின்பக்கம் ஒரு போட்டோ, இதெல்லாம் ஒரு நாடகம் என டுவிட் செய்திருந்தார்

இந்த டுவிட்டை பார்த்து கடும் கோபமடைந்த குஷ்பூ அந்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முட்டாள்கள் எப்போதும் முட்டாள்களாக இருப்பார்கள் என்பதற்கு நீங்கள் தான் உதாரணம். நீங்கள் படித்தது எல்லாம் வேஸ்ட். புகைப்படத்தில் இருக்கும் இரண்டு நபர்களின் உடைகளும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? அல்லது உங்கள் கண் பார்வையில் கோளாறு இருக்கிறதா? உங்களுடைய முட்டாள் தனத்துக்கு ஒரு அளவே இல்லையா? இதுவரை பயன்படுத்தாத மூளையை இனிமேலாவது கொஞ்சமாவது பயன்படுத்துங்கள் என்று குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்புவின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது