உடலை வில்லாக வளைத்து யோகா செய்யும் குஷ்பு: வைரலாகும் புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Friday,July 31 2020]
கடந்த 90களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் ஒரு நடிகைக்காக ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அது குஷ்புவுக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது குஷ்புவுக்கு 49 வயது ஆன போதிலும் தற்போது அவர் சினிமா, தொலைக்காட்சி தொடர் மற்றும் அரசியலில் பிசியாக உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் முக்கிய வேடத்தில் குஷ்பு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் குஷ்பு தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து யோகா மற்றும் உடற்பயிற்சிகளை விடாமல் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த புகைப்படங்களில் உடம்பை வில்லாக வளைத்து யோகா செய்யும் புகைப்படங்கள், உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வயதிலும் தனது உடல் எடையை குறைக்க குஷ்பு எடுத்துள்ள முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களான ஹன்சிகா, கிகிவிஜய், பிருந்தா மாஸ்டர் உள்பட பலரும் குஷ்புவின் இந்த புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமடைந்து அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
#Inspire #Workoutmode #healthylifestyle #nopainnogain #mentalhealth #spirit #flexibility ❤️ pic.twitter.com/39PRMDPIIB
— KhushbuSundar ❤️ (@khushsundar) July 28, 2020