நான் ஆணாக இருந்திருந்தால்? குஷ்பு வெளியிட்ட புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே பிரபலங்களின் புகைப்படங்கள் ஃபேஸ் செயலி மூலம் பாலின மாற்றம் செய்யப்பட்டு வேடிக்கையாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும், அந்த புகைப்படங்களை அனைவரும் ரசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் பிரபலங்கள் பேஸ் ஆப் மூலம் பெண்ணாக மாறிய புகைப்படங்கள் மற்றும் வயதானால் எப்படி இருப்பார்கள் போன்ற புகைப்படங்கள் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு ஆணாக இருந்தால் எப்படி இருக்கும் என்று ஃபேஸ் ஆப் மூலம் மாற்றப்பட்ட ஒரு புகைப்படத்தை குஷ்புவே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நான் ஆணாக இருந்தாலும் அழகாகத்தான் இருக்கின்றேன்’ என்று இந்த புகைப்படத்திற்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டுவிட்டர் பயனாளி ’கணேஷ் வெங்கட்ராமனின் சகோதரர் போல் இருக்கின்றீர்கள்’ என்றும், இன்னொருவர் ‘டங்கல்’ படத்தில் பார்த்த அமீர்கானை பார்த்ததுபோல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆண் போல் மாறிய குஷ்புவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
And if I was a man.. not bad actually..???????????????????? pic.twitter.com/mvYK5ob2RV
— KhushbuSundar ❤️ (@khushsundar) July 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com