பெயரை மாற்றிய குஷ்பு! புதிய பெயர் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

நடிகை, தயாரிப்பாளராக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராகவும் இருந்து வருகிறார் குஷ்பு. மேலும் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்கபூர்வமாக சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கும் டுவிட்டரின் மூலமே பதிலடி கொடுத்து வருபவர் குஷ்பு

இந்த நிலையில் குஷ்புவை பாஜகவினர் சிலர் அவரது இயற்பெயரான நக்கத் கான் என்று கூறி கிண்டல் செய்தனர். இதற்கு பதிலளித்த குஷ்பு, என் இயற்பெயரை இப்போதுதான் தெரிந்து கொண்டீர்களா? நான் என் இயற்பெயரை என்றுமே மறுத்ததும் இல்லை, மறக்கவில்லை. ஆமாம், என் பெயர் நக்கத் கான் தான், இனிமேல் என்னுடைய டுவிட்டரும் அதே பெயரில்தான் இருக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

அவ்வாறு கூறியது மட்டுமின்றி டுவிட்டரில் தனது பெயரையும் அவர் நக்கத் கான் என்று மாற்றி இந்த பெயர் பாஜகவினர்களுக்கு மட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த துணிச்சலுக்கு அவரது ஃபாலோயர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More News

பாலைவனத்தில் நடந்தாலும் சிஎஸ்கே கூட்டம் வரும்: இம்ரான் தாஹிர்

ஒருசில அரசியல்வாதிகள் மற்றும் ஒருசில திரையுலகினர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடக்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது,.

காவிரி விவகாரம்: திமுக பிரமுகரின் கேள்விக்கு பதிலளித்த எடிட்டர் ரூபன்

காவிரி மேலாண்மை அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என ஒருசில திரையுலக பிரபலங்கள் நடத்திய போராட்டம் தற்போது அவர்களுக்கே எதிராக திரும்பியுள்ளது.

சேலம் ஏரிகளை திடீரென பார்வையிட்ட சிம்பு: புதிய திட்டம் என்ன?

பியூஸ் மானுஸ் என்ற சமூக ஆர்வலர் சேலம் பகுதி மக்களுடன் இணைந்து சில ஏரிகளை தூர் வாரினார் என்பதும், அந்த ஏரிகளில் தற்போது இருக்கும் தண்ணீர்தான் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது

நீங்க வேற லெவல் மாஸ்: சிஎஸ்கே ரசிகர்களை புகழ்ந்த ஹர்பஜன்

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ஐபிஎல் போட்டியில் களமிறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையாக சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீரெட்டிக்கு எதிராக போராட்டம் செய்த விஷால் பட நடிகை கைது

கடந்த சில நாட்களாக ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தெலுங்கு திரையுலகை கதிகலக்கி கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு திரையுலகில் இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.