அவங்க நல்லா இருக்க மாட்டாங்க.. சுனைனாவுக்கு சாபம் இட்டாரா காலித் முதல் மனைவி..

  • IndiaGlitz, [Saturday,July 06 2024]

நடிகை சுனைனா துபாயை சேர்ந்த யூடியூபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்ய போகும் யூடியூபரின் முதல் மனைவி சாபம் இட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாயை சேர்ந்த யூடியூபர் காலித் அல் அமெரி என்பவரை நடிகை சுனைனா திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காலித் அல் அமெரிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள் நிலையில் சுனைனாவுடன் காதலில் விழுந்ததால் தான் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து பேசிய காலித் அல் அமெரி முதல் மனைவி சலாமா ’நான் இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றேன், முதலில் நான் பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருந்தேன், அதன் பின்னர் கணவருக்கு கட்டுப்பட்டு இருந்தேன், இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் எனக்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்றும், அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சாபமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது. அவரது இந்த சாபம் சுனைனாவுக்கா? அல்லது வேறு யாருக்கா? என்பது தெரியாத நிலையில் அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் காலித் அல் அமெரி தற்போது கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் இருப்பதாகவும் விரைவில் அவர் சுனைனாவை ரகசிய திருமணம் செய்து கொண்டு அதன்பின் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.

 

More News

விருந்துக்கு சென்ற இடத்தில் இந்திரஜாவுக்கு முத்தம் கொடுத்த நடிகையின் கணவர்.. வைரல் புகைப்படம்..!

காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் ஜோடியாக சமீபத்தில் விருந்துக்கு சென்றதாகவும் அங்கு நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களை

மைக்கேல் மதன காமராஜன் பட  நடிகர் காலமானார்.. இரங்கல் வீடியோ வெளியிட்ட காமெடி நடிகர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நான்கு வேடங்களில் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' என்ற திரைப்படத்தின் நடித்த காமெடி நடிகர் காலமானதை எடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் 'கூலி' படத்தில் இணைந்த விஜய்யின் 'மாஸ்டர்' நடிகர்.. எதிர்பார்ப்பு எகிறுதே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை

மணிரத்னம் உதவியாளராக பணிபுரியும் பிரபல நடிகரின் மகள்.. எதிர்கால கனவு என்ன தெரியுமா?

பிரபல நடிகரின் மகள் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தில் கூட அவர் உதவி இயக்குனராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதரவாக சின்மயி கணவர்.. எதிர்ப்பாக விஷ்ணு விஷால் மனைவி.. என்ன நடக்குது சமந்தா விஷயத்தில்?

நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறிய மருத்துவ குறிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு ஒரு மருத்துவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்