அவங்க நல்லா இருக்க மாட்டாங்க.. சுனைனாவுக்கு சாபம் இட்டாரா காலித் முதல் மனைவி..
- IndiaGlitz, [Saturday,July 06 2024]
நடிகை சுனைனா துபாயை சேர்ந்த யூடியூபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படும் நிலையில் அவர் திருமணம் செய்ய போகும் யூடியூபரின் முதல் மனைவி சாபம் இட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயை சேர்ந்த யூடியூபர் காலித் அல் அமெரி என்பவரை நடிகை சுனைனா திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காலித் அல் அமெரிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள் நிலையில் சுனைனாவுடன் காதலில் விழுந்ததால் தான் அவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது விவாகரத்து குறித்து பேசிய காலித் அல் அமெரி முதல் மனைவி சலாமா ’நான் இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் இருக்கின்றேன், முதலில் நான் பெற்றோருக்கு கட்டுப்பட்டு இருந்தேன், அதன் பின்னர் கணவருக்கு கட்டுப்பட்டு இருந்தேன், இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
மேலும் எனக்கு துரோகம் செய்தவர்கள் நன்றாக இருக்க மாட்டார்கள் என்றும், அவர்களை சும்மா விடமாட்டேன் என்றும் சாபமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது. அவரது இந்த சாபம் சுனைனாவுக்கா? அல்லது வேறு யாருக்கா? என்பது தெரியாத நிலையில் அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் காலித் அல் அமெரி தற்போது கேரளாவில் உள்ள வயநாட்டில் தான் இருப்பதாகவும் விரைவில் அவர் சுனைனாவை ரகசிய திருமணம் செய்து கொண்டு அதன்பின் திருமண அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் வதந்திகள் பரவி வருகிறது.