'கேஜிஎப்' வில்லன் கருடா மனைவி குழந்தைகளை பார்த்ததுண்டா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 12 2023]

நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்த கருடாவின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமச்சந்திர ராஜு. இவர் கருடா என்ற கேரக்டரில் இந்த படத்தில் நடித்ததால் அவரை ரசிகர்கள் கருடா என்று அவரை அழைத்து வருகின்றனர்.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ விஜய் ஆண்டனி நடித்த ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்த ராமச்சந்திர ராஜு கடந்த ஆண்டு வெளியான அருண் விஜய்யின் ’யானை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ’ஜன கன மன’ என்ற தமிழ் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகர் ராமச்சந்திர ராஜுவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அவருடைய மனைவி மகன் மற்றும் மகள் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து கொடூர வில்லன் வேடத்தில் நடித்த கருடாவுக்கு இப்படி ஒரு அழகான குடும்பமா என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

மாதவன் - நயன்தாரா படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகை..!

மாதவன் மற்றும் சித்தார்த் ஆகிய இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் 'தி டெஸ்ட்' என்ற திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

DRS என்றால் தோனி ரெவ்யூ சிஸ்டமா? மின்னல் வேகத்தில் முடிவெடுக்கும் தல..!

 கிரிக்கெட் விளையாட்டில் DRS என்பது உண்டு என்பதும் அதற்கு Decision Review System என்பது பொருள் என்பதும் கிரிக்கெட் தெரிந்த அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தோனி இந்த DRS முடிவை எடுப்பதில் மின்னல்

காரணமே இல்லாமல் தள்ளி வைக்கப்பட்ட 'யானை முகத்தான்': புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

யோகி பாபு நடித்த 'யானை முகத்தான்' என்ற திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்தது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் கமல்ஹாசன்.. செம்ம மாஸ் புகைப்படம்..!

'இந்தியன் 2' படக்குழுவினர் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ள நிலையில் அங்கு கமல்ஹாசன் இருக்கும் செம்ம மாஸ் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'சூர்யா 42' படத்தின் புதிய போஸ்டருடன் அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட