close
Choose your channels

'கேஜிஎப்' வில்லன் கருடா மனைவி குழந்தைகளை பார்த்ததுண்டா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

Wednesday, April 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்த கருடாவின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யாஷ் நடித்த ’கேஜிஎப்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராமச்சந்திர ராஜு. இவர் கருடா என்ற கேரக்டரில் இந்த படத்தில் நடித்ததால் அவரை ரசிகர்கள் கருடா என்று அவரை அழைத்து வருகின்றனர்.

கார்த்தி நடித்த ’சுல்தான்’ விஜய் ஆண்டனி நடித்த ’கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்த ராமச்சந்திர ராஜு கடந்த ஆண்டு வெளியான அருண் விஜய்யின் ’யானை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் ’ஜன கன மன’ என்ற தமிழ் படத்திலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் நடிகர் ராமச்சந்திர ராஜுவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அவருடைய மனைவி மகன் மற்றும் மகள் இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து கொடூர வில்லன் வேடத்தில் நடித்த கருடாவுக்கு இப்படி ஒரு அழகான குடும்பமா என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment