close
Choose your channels

பிரபல வெற்றிப்பட நடிகருக்கு ஆண் குழந்தை!

Wednesday, October 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யாஷ்- ராதிகா தம்பதிகளுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆய்ரா என்ற பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது பத்தே மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் யாஷூக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தி அறிந்ததில் இருந்து அவருடைய ரசிகர்கள் இரண்டாவது குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment