பூஜையுடன் தொடங்கிய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம்!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் ஐந்து முக்கிய நடிகர்களின் படங்களுடன் ரிலீஸ் ஆன கன்னட டப்பிங் படம் 'கேஜிஎப். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றிருந்த நடிகர் விஷாலின் பிரமாதமான புரமோஷன் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆகியவைகளால் ஒரிஜினல் தமிழ் படங்களின் வசூலுக்கு இணையான வசூலை பெற்று நல்ல வரவேற்பை பெற்றது.

பிரபல கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்த இந்த படம் தென்னிந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவிருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது.

பெங்களூர் விஜயநகரில் உள்ள ஒரு கோவிலில் இந்த படத்தின் பூஜை சற்றுமுன் நடைபெற்றது. இந்த பூஜையில் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல், நடிகை ஸ்ரீநிதிஷெட்டி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
 

More News

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குங்கள்: தமிழ் நடிகை ஆவேச கருத்து

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்கு சாதகமாக அரசியலாக்கி வரும் நிலையில் உண்மையான கொதிப்புடன் கருத்து கூறி வருபவர்களில் திரையுலகினர்களும் சிலர் என்பது தான் உண்மை

'ஐரா' டைட்டிலின் அர்த்தம் இதுதான்:

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக பவானி, யமுனா என்ற இரட்டை வேடத்தில் நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.

யூடியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

யூடியூப் இணைதளத்தில் இல்லாத விஷயங்களே இல்லை என்ற அளவுக்கு அதில் கோடிக்கணக்கான விஷயங்கள் கொட்டி கிடப்பதால் மாணவர்கள் முதல் பொதுமக்கள்

சிபிஐக்கு செல்கிறது பொள்ளாச்சி பாலியல் வழக்கு

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம்பெண்களை சீரழித்து ஆபாச வீடியோ எடுத்ததாக நால்வர் கைதாகியுள்ள நிலையில் இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும்,

என் பையன் அப்பாவி: திருநாவுக்கரசு தாயார் பொதுமக்களிடம் வாக்குவாதம்

சமூக வலைத்தளங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட அப்பாவி இளம்பெண்களை சீரழித்து, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியவர்களில் ஒருவனான திருநாவுக்கரசுவை