திரைக் கலைஞர்களுக்கு ரூ.1.5கோடி நிதியுதவி… கேஜிஎஃப் நடிகரின் செம மாஸ் செயல்!

  • IndiaGlitz, [Thursday,June 03 2021]

கொரோனா நேரத்தில் வேலை இழந்து தவித்து வரும் கன்னட திரைக் கலைஞர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்க போவதாக கேஜிஎஃப் நடிகர் யாஷ் தகவல் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவலை அடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் சினிமா துறை மட்டும் அல்ல பல நூற்றுக்கணக்கான தொழில் துறைகள் நொடிந்துபோய் இருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. அதோடு சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பல மாதங்களாக வேலையின்றி தவித்து வரும் கன்னடத் திரைக்கலைஞர்கள் 3,000 பேருக்கு தலா ரூ.5,000 நன்கொடை வழங்க உள்ளதாக நடிகர் யாஷ் தகவல் வெளியிட்டு உள்ளார். இதையடுத்து சினிமா கலைஞர்கள் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல தமிழ் சினிமாவில் பெப்சி கலைஞர்களுக்கு பல பிரபலங்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தல அஜித் அவர்கள் ரூ.10 லட்சம் நிதியதவி வழங்கி இருந்தார். இந்நிலையில் கன்னட திரைக் கலைஞர்களுக்கு நடிகர் யாஷ் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்குவது இந்திய அளிவில் பெரிய வரவேற்பை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுக்கவே பிரபலமானார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜுலை 16 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கேஜிஎஃப் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

More News

சூப்பர்ஹிட் கன்னட படத்தின் ரீமேக்கில் 'மாஸ்டர்' நடிகர் தான் நாயகனா?

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிம்புவுக்காக பணியை ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான்: விரைவில் படப்பிடிப்பு என தகவல்!

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் பாடல் கம்போசிங் பணியை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது

அப்படி என்ன சாதித்து விட்டார் கலைஞர்?

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் விமர்சையாகப் பேசப்பட்டு வருகிறது.

ஊசிய பாத்து குத்துங்க, செல்லக்குட்டிக்கு வலிக்கும்: தடுப்பூசி போட்டு கொண்ட ஷிவாங்கி 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும் என மத்திய மாநில அரசுகள்

தடுப்பூசி உற்பத்திக்கு உத்தரவிட முடியாது.. உயர்நீதிமன்றம் பதில் ...!

செங்கல்பட்டில் உள்ள  தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தில், கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய அனுமதி வழக்கப்படமாட்டாது என  உயர்நீதிமன்றம் கூறியுள்ளது