திரைக் கலைஞர்களுக்கு ரூ.1.5கோடி நிதியுதவி… கேஜிஎஃப் நடிகரின் செம மாஸ் செயல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் வேலை இழந்து தவித்து வரும் கன்னட திரைக் கலைஞர்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்க போவதாக கேஜிஎஃப் நடிகர் யாஷ் தகவல் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவலை அடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவால் சினிமா துறை மட்டும் அல்ல பல நூற்றுக்கணக்கான தொழில் துறைகள் நொடிந்துபோய் இருக்கிறது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. அதோடு சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பல மாதங்களாக வேலையின்றி தவித்து வரும் கன்னடத் திரைக்கலைஞர்கள் 3,000 பேருக்கு தலா ரூ.5,000 நன்கொடை வழங்க உள்ளதாக நடிகர் யாஷ் தகவல் வெளியிட்டு உள்ளார். இதையடுத்து சினிமா கலைஞர்கள் பலரும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல தமிழ் சினிமாவில் பெப்சி கலைஞர்களுக்கு பல பிரபலங்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தல அஜித் அவர்கள் ரூ.10 லட்சம் நிதியதவி வழங்கி இருந்தார். இந்நிலையில் கன்னட திரைக் கலைஞர்களுக்கு நடிகர் யாஷ் ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்குவது இந்திய அளிவில் பெரிய வரவேற்பை பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் யாஷ் கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்தியா முழுக்கவே பிரபலமானார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஜுலை 16 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக கேஜிஎஃப் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments