close
Choose your channels

கேஜிஎப் யாஷ் குழந்தையின் க்யூட் சிரிப்பு: வைரல் வீடியோ!

Sunday, June 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎஃப்’ என்ற திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் ரூ.80 கோடியில் தயாரான இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூல் செய்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து விட்டது என்பதும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படம் தமிழ் கன்னடம் உள்பட பல மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கேஜிஎப் நடிகர் யாஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியும் நடிகையுமான ராதிகா பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தையும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தனது குழந்தைகளின் புகைப்படத்தை அவ்வப்போது யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட் தங்களது இன்ஸ்டா பக்கங்களில் வெளியிடுவார்கள் என்பதும் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைக்கு நகம் வெட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார். பொதுவாக குழந்தைகள் நகம் வெட்டும்போது அழுவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த வீடியோவில் குழந்தையை சிரிக்க வைத்துக்கொண்டே ராதிகா பண்டிட் நகம் வெட்டும் காட்சி உள்ளது. குழந்தையின் கியூட் சிரிப்பை பார்த்து அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment