மாஸ் திரைப்படம் “கேஜிஎஃப் 2“ குறித்த புது அப்டேட்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக குறித்த நேரத்தில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் “கேஜிஎஃப் 2“ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்து இருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கேஜிஎஃப்“. இந்தப் படம் இந்தியா முழுக்கவே பலத்த வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் யஷ் நடித்து இருந்தார். அவரோடு ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் எனப் பல முக்கிய நடிகர்களும் நடித்து இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்தப் படம் வரும் ஜுலை 16 ஆம் தேதி திரையரங்கிற்கு வரும் எனப் படக்குழு அறிவித்து இருந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை தற்போது தள்ளி வைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் இரண்டாம் அலை முழுவதும் ஓய்ந்த பிறகு வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திரையங்கில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.

More News

ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்: வேற லெவலில் டிடி புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

கர்ப்பிணி மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சாண்டி: வைரல் புகைப்படம்!

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் பிறந்தநாளை அடுத்து உருக்கமாக கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்

இவர் உங்கள் மகளா? தங்கையா? சீரியல் நடிகையிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்வி!

பிரபல தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் இவ்வளவு இளமையாக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளா?

வசூல்ராஜா ஸ்டைலில் புற்றுநோயால் அவதிப்படும் ரசிகருக்கு நம்பிக்கை ஊட்டிய நடிகர் கமல்!

கனடாவில் இருக்கும் சாகேத் என்பவர் மூளை புற்றுநோயால் அவதிப்படுவதாகவும் அவர் தனது தீவிர ரசிகர் என்பதையும் தெரிந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் சாகேத்துடன்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு…. உறுதிப்படுத்திய சுகாதாரத்துறை!

சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.