close
Choose your channels

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Sunday, August 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கேஜிஎப்’ என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள பான் - இந்தியா திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ரிலீஸுக்கு தயாராக இருந்தபோதிலும் இந்தியா முழுவதும் திரை அரங்குகள் திறந்த பின்னரே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை ஜி நிறுவனம் பெற்றிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகர் யாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், சஞ்சய்தத் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாகவும், இந்தப் படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment