ரஜினியின் சாதனையை பின்னுக்கு தள்ளியது 'கேஜிஎஃப் 2'

அமெரிக்காவில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படத்தின் வசூல் சாதனையை ’கேஜிஎப் 2’ திரைப்படம் முறியடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், பாகுபலி மற்றும் 2.0 ஆகிய நான்கு படங்கள் உள்ளன.

இவற்றில் ’பாகுபலி 2’ 20 மில்லியன் டாலர்களையும், ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 14 மில்லியன் டாலர்களையும், ’பாகுபலி’ 8 மில்லியன் டாலர்களையும், ரஜினியின் ‘2.0’ திரைப்படம் 5.5 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது .

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் 6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்ததை அடுத்து ரஜினியின் ‘2.0’ படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு நான்காவது இடத்தை ’கேஜிஎப் 2’ பிடித்துள்ளது. கன்னட திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் ஆறு மில்லியன் டாலர் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.