ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? 'ஆர்.ஆர்.ஆர்' வசூலை நெருங்கும் 'கேஜிஎஃப் 2'

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் வசூலை ’கேஜிஎப் 2’ திரைப்படம் நெருங்கிவிட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் முதல் நாள் முதலே வசூலில் சாதனை செய்து வருகிறது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை செய்திருப்பதாகவும் கடந்த ஒரு வாரத்தில் இந்தியில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 715 கோடிகளை வசூல் செய்துள்ள ’கேஜிஎப் 2’ திரைப்படம் மிக விரைவில் ஆயிரம் கோடி வசூல் செய்து ‘ஆர்.ஆர்.ஆர் படத்தின் வசூலுக்கு இணையாக வசூல் செய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகி ’கேஜிஎப் 2’ திரைப்படம் நாளுக்கு நாள் திரையரங்குகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் படத்தின் வசூலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ’கேஜிஎப் 2’ திரைப்படத்தின் பட்ஜெட் யாஷ், பிரசாந்த் நீல் சம்பளம் இல்லாமல் ரூ.100 கோடி என்ற நிலையில் அதைவிட பல மடங்கு லாபத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.