ஓடிடியில் 'கே.ஜி.எப் 2' படத்தை பார்க்க இவ்வளவு கட்டணமா? அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்!

யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது என்பதும் இந்த படம் 1100 கோடியை தாண்டி தற்போது திரையரங்குகளில் வசூல் செய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் அமேசன் பிரைம் விடியோவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் பார்க்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்தாதாரர்களாக இருந்தாலோ அல்லது சந்தாதாரராக இல்லாமல் இருந்தாலோ ரூ.199 கட்டணம் செலுத்தி ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் அமேசான் பிரைமில் ‘கே.ஜி.எப் 2’ திரைப்படம் இடம் பெறவுள்ளது.

‘கே.ஜி.எப் 2’ படத்திற்காக ரூ..199 கட்டணம் கட்டினால் மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவிப்பு சந்தாதாரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.