36 வயது ஹீரோவுக்கு 27 வயது அம்மா: 'கேஜிஎப் 2' நடிகையின் ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
‘கேஜிஎப் 2’ படத்தின் ஹீரோவான யாஷுக்கு அம்மாவாக நடித்த நடிகைல் யாஷை விட 9 வயது குறைந்தவர்என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது .
‘கேஜிஎப் 2’திரைப்படத்தில் யாஷின் மாஸ் நடிப்பு சூப்பர் ஆக இருந்தாலும் இந்த படத்தின் அம்மா சென்டிமென்ட் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணம் என்பதும், யாஷின் அம்மாவாக அர்ச்சனா ஜோய்ஸ் என்பவர் சிறப்பாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இவர் கேஜிஎப் முதல் பாகத்திலேயே அம்மாவாக நடித்த நிலையில் அவரே இரண்டாம் பாகத்திலும் அம்மாவாக நடித்திருந்தார். அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் விமர்சகர்களால் பாராட்டப் படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ராக்கி பாய் கேரக்டரில் நடித்த யாஷின் வயது 36 என்ற நிலையில் அவருக்கு அம்மாவாக நடித்த அர்ச்சனா ஜோய்ஸ் வயது 27 என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 27 வயது நடிகை 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடித்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டிய கலைஞரான அர்ச்சனா ஜோய்ஸ் பல மேடைகளில் நடனமாடி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி கன்னட சின்னத்திரை உலகிலும் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments