கேஜிஎப் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜூனியர் என்.டி.ஆர்: அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Friday,May 20 2022]

’ஆர்.ஆர்.ஆர்’ நாயகன் ஜீனியர் என்டிஆர், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் ’என்.டி.ஆர் 31’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் ஏப்ரல் 2023-ல் படபிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’கே.ஜி.எப் 2’ ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரு முக்கிய தூண்களான, ஜூனியர் என்டிஆர், மற்றும் பிரசாந்த் நீல், ஆகியோர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ’என்.டி.ஆர் 31’ என்ற படத்தில் இணைந்துள்ளனர். ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

திரைப்பட ஆர்வலர்கள் முதல் திரைப்பட விமர்சகர்கள் வரை, உலகெங்கிலும் உள்ள மக்கள் ’ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’கே.ஜி.எப் 2’ படத்தின் மீது தொடர்ந்து பாராட்டுக்களையும் அன்பையும் பொழிந்து வருகின்றனர். இரண்டு படங்களும் ரசிகர்களின் இதயங்களை வென்றதோடு, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளன. பார்வையாளர்கள் இப்போது ’என்.டி.ஆர் 31இல் அவர்களது கவனத்தை குவித்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும் இப்படம் வெளியாவதற்காக இப்பொழுதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர்.

என்டிஆர் மாஸ் நிறைந்த நாயகனாகவும், பிரசாந்த் நீல் மாஸ் நிறைந்த இயக்குனராகவும் வலம் வருகின்றனர். இந்த டைனமிக் ஜோடி என்டிஆர் 31-யை மிகவும் பரபரப்பான பான்-இந்தியா படங்களில் ஒன்றாக ஆக்குகிறது.

இந்த மாபெரும் படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல், இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரமாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் இன்று அமைந்துள்ளது. என்றார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜீனியர் என் டி ஆர் நடிப்பில் உருவாகும் என்டிஆர் 31 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 2023-ல் துவங்குகிறது.