ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி வீட்டில் இருக்கும் திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலர் தங்களது சமூக வலைதளங்களில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான, நகைச்சுவையான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமீபத்தில் கமலஹாசன் நடித்த ’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ’இஞ்சி இடுப்பழகி’ என்ற பாடலுக்கு மனைவி மற்றும் மகளுடன் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் டேவிட் வார்னரை அடுத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தனது சமூக வலைத்தளத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். அர்ஜூன், நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ‘ஜெண்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ என்ற பாடலுக்குத்தான் கெவின் பீட்டர்சன் நடனமாடியுள்ளார்.
கெவின் பீட்டர்சனின் இந்த நடனத்திற்கு லைக்ஸ்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து வருகிறது. பாடலின் அர்த்தம் புரியாமலேயே நடனம் ஆடிய கெவின் பீட்டர்சனுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது என்பதும், தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் உலக அளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பதும் இதன்மூலம் தெரிய வருகிறது.
@kevinpietersen ?? ##houseoftiktok ??
♬ OTTAGATHAI KHATIKHO - SAMIER
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com