உணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிகப்பு கலரில் உணவுகளின் மேல் பரிமாறப்படும் கெச்சப் தற்போது பெரும்பாலான நாடுகளில் பிரபலம் ஆகி இருக்கிறது. ஆனால் கெச்சப் தயாரிக்கப் பட்ட ஆரம்பக் கட்டத்தில் அமெரிக்கர்களும் ஐரோப்பிர்களும் அதை விஷம் என்று ஒதுக்கியே வைத்தனர். பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கெச்சப் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு அதை வெறுத்த அமெரிக்கர்களே இன்றைக்கு கொண்டாடும் நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறது. முறையான கெச்சப் தயாரிப்பிலும் தொடர்ந்து அமெரிக்கர்களே முதல் இடத்தைப் பிடித்து இருககின்றனர்.
தற்போது கெச்சப் இல்லாத அமெரிக்க வீடுகளைப் பார்க்கவே முடியாது என்று சொல்லலாம். ஒவ்வொரு அமெரிக்க மக்களும் ஆண்டு ஒன்றுக்கு 3 கெச்சப் பாட்டிலை சாப்பிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தக் கெச்சப் முதன் முதலாக 1800 களில் கண்டுபிடிக்கப் பட்டது. ஆனால் அறிமுகமான சமயத்தில் அதைக் கெடாமல் பக்குவப்படுத்தும் கலை தெரியாமல் இருந்தது. அதனால் பெரும்பலானவர்கள் அதை விஷம் என்று ஒதுக்கி வைத்தனர். பின்னாட்களில் தக்காளியை அதிகமாகப் பயன்படுத்தும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்கள் கெச்சப் டேஸ்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத் தொடங்கினர்.
அதற்குபின்பு சீனர்கள் முதன் முதலாக மீன்களில் கெச்சப்பை தயாரித்து பயன்படுத்தத் தொடங்கினர். அந்த கெச்சப் விற்பனையும் கலை கட்டியது. இதையே காய்கறிகளை வைத்து செய்து பார்த்தால் என்ன என்ற யோசனை உதிக்கவே அப்படி ஆரம்பித்ததுதான் இன்றைக்கு பிரபலமாகி இருக்கும் தக்காளி கெச்சப். ஆரம்பத்தில் தக்காளி கெச்சப் என்றாலே பயந்து ஓடிய அமெரிக்கர்கள் தக்காளியை வைத்து முறையான கெச்சப்பை தயாரிக்கத் தொடங்கினர். 1812 ஆம் ஆண்டு ஜேம்ஸ் மீஸ் என்ற அமெரிக்கர் தக்காளி கெச்சப்பை முதன் முதலாகக் கண்டுபிடித்தார். ஆனால் அதுவும் மிக விரைவாகக் கெட்டுப்போகும் தன்மைக் கொண்டதாக இருந்தது. இதனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பியரி பிளாட் என்ற சமையல் கலை நிபுணர் விரைவாகக் கெட்டுப்போகும் தன்மைக்கொண்ட கெச்சப்பை மக்கள் யாரும் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரமே செய்யத் தொடங்கிவிட்டார்.
அதையடுத்து கெச்சப் தயாரிக்கும் நிறுவனங்கள் நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்க, செயற்கைப் பொருட்களைச் சேர்க்கத் தொடங்கினர். ஆனால் அது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம் என்று பயந்த மக்கள் அதை வாங்க மறுத்தனர். பின்னர் 1990 களில் ஹார்வே வாஷிங்டன் வில்லே என்ற உணவு வேதியியலாளர் ஹென்றி ஹெயின்ஸ் என்ற வணிகரோடு இணைந்து கெச்சப் தயாரிக்கத் தொடங்கினார். நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வினிகரை மட்டும் பயன்படுத்தி, உடலுக்குத் தீங்கு விளைவிக்காத தக்காளி கெச்சப்பை அவர் தயாரித்தார். இந்தக் கெச்சப் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின், ஹெயின்ஸ் மிகப் பிரபலமான தக்காளி கெச்சப் தயாரிக்கும் நிறுவனமாக மாறியது. இந்நிறுவனம் பிரபலமானதை அடுத்து பல நிறுவனங்கள் தக்காளியைக் கொண்டு கெச்சப் தயாரிக்கத் தொடங்கினர். ஆனாலும் இன்றைக்கும் ஹெயின்ஸ் கெச்சப் க்கு என்று ஒரு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout