வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸ்: மனமுடைந்து தீக்குளித்த இளைஞர் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் மிகக்கடுமையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதோடு அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சூரியநெல்லி என்ற பகுதியில் போலீசார் ஊரடங்கு உத்தரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே விஜயகுமார் என்ற 24 வயது வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது அவரை மறித்து அவரை போலீஸார் விசாரணை செய்தனர். அவர் எந்தவிதமான காரணமும் இன்றி வெளியே வந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வாகனத்தை பறிமுதல் செய்தால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் உடனடியாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார்களும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும் அந்த இளைஞரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் 75 சதவீதத்தை காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வாகனத்தை பறிமுதல் செய்ததால் மனமுடைந்து இளைஞர் ஒருவர் தீக்குளித்த உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout