பாகுபலி பாணியில் யானைக்கு முத்தம் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்


Send us your feedback to audioarticles@vaarta.com


எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தில் நாயகன் பிரபாஸ் யானைக்கு முத்தம் கொடுத்து அதன் துதிக்கையின் மீது ஏறி முதுகில் உட்காருவார். இந்த கம்பீரமான காட்சி அனைவரையும் கவர்ந்தாலும் இதுவொரு கிராபிக்ஸ் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதே பாணியை நிஜத்தில் செய்ய முயற்சித்த கேரள வாலிபர் ஒருவரின் உயிர் தற்போது ஊசலாடி வருகிறது. கேரளாவை சேர்ந்த தொடுபுழா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் பெர்மிஷேசரி காட்டுப்பகுதிக்கு சென்றார். மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் அங்கிருந்த யானையை பார்த்ததும் தானும் பிரபாஸ் போன்று யானை மேல் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.
முதலில் யானைக்கு பழங்கள் கொடுத்து சாப்பிட செய்த அந்த இளைஞர் பின்னர் துதிக்கைக்கு முத்தம் கொடுத்தார். அப்போது திடீரென எதிர்பாராத வகையில் யானை அவரை தூக்கி போட்டது. இதனால் தலைகுப்புற விழுந்த அந்த இளைஞருக்கு பேச்சுமூச்சு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments