5 மாநிலங்கள், 2700கிமீ: மகனை பார்ப்பதற்காக பயணம் செய்த தாய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கித் தவித்த தனது மகனை மீட்பதற்காக 1400 கிமீ தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து அழைத்து வந்தார் என்பதை பார்த்தோம். அதேபோல் உடல் நலமற்ற மனைவியைக் காப்பாற்றுவதற்காக அவரை சைக்கிளில் வைத்து கும்பகோணம் முதல் புதுச்சேரி வரை சென்ற முதியவர் ஒருவர் குறித்த தகவலையும் பார்த்தோம். இந்த நிலையில் உடல் நலமில்லாத மகனை பார்ப்பதற்காக 5 மாநிலங்கள் கடந்து 2700 கிலோ மீட்டர் பயணம் செய்த தாய் ஒருவர் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ராஜஸ்தானில் பி.எஸ்.எப்.பில் பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருடைய உடல்நிலை சரியில்லாமல் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் ஷீலாம்மா உடனடியாக மகனைச் சந்திக்க முடிவு செய்தார்.
இதற்காக அவர் கோட்டயம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ராஜஸ்தான் வரை செல்வதற்கு தேவையான பாஸ்களையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் மருமகள் பார்வதி மற்றும் உறவினர் ஒருவருடன் கடந்த 14ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து பபுறப்பட்ட ஷீலாம்மா, தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானுக்கு 14ம் தேதி சென்று சேர்ந்துள்ளார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்து அவரது உடல் நிலை சீராக இருப்பதை அறிந்த பின்னரே அவர் நிம்மதி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ’கடவுள் அருளால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வந்து சேர்ந்தோம். என்னுடைய மகன் தற்போது உடல்நிலை தேறி வருகிறார். இந்த பயணத்திற்கு உதவி செய்த கோட்டயம் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி என்று கூறியுள்ளார். மகனை பார்ப்பதற்காக 2500 கிலோ மீட்டர் பயணம் செய்த தாயின் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout