இளம் ஜோடிகளுக்கு கொரோனா வார்டில் திருமணம்… விதிமுறை மீறலா இது?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனுக்காக கவச உடை அணிந்து கொரோனா வார்டுக்கே சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதிப் பெற்ற பிறகே இந்தத் திருமணம் நடத்தப் பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் சரத். இவர் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் கேரளா திரும்பியுள்ளார். இவருக்கும் கைனகரி பகுதியைச் சார்ந்த அபிராமி என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயமாகி ஏப்ரல் 25 ஆம் தேதி திருமணம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இப்படி திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில் மணமகன் சரத்திற்கும் அவரது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து முடிவு செய்யப்பட்டபடி திருமணம் நடக்குமா? என்பதே மாப்பிள்ளை வீட்டாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் நிச்சயிக்கப்பட்ட தேதியில் எப்படியாவது திருமணம் நடத்திவிட வேண்டும் என முடிவெடுத்த பெண் வீட்டார் மாவட்ட ஆட்சியர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று உரிய நேரத்தில் மணமகன் இருக்கும் கொரோனா வார்டுக்கே மணமகளையும் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் மணமகள் பாதுகாப்பு உடையணிந்து கொரோனா வார்டுக்குச் சென்றவுடன் மணமகனின் தாயார் மாலை எடுத்துக் கொடுக்க மணமகன் பெண்ணிற்கு மாலை அணிவித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கொரோனா வார்டில் நடைபெற்ற இத்திருமணத்தை அங்கிருந்த அனைவரும் விசித்திரமாக பார்த்ததுடன் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments