பிரபல பாடகியிடம் ரூ.50 நஷ்ட ஈடு கேட்ட இளம்பெண்: பெரும் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாலிவுட் பாடகி அனுராதா பாட்வல் தான் தனது உண்மையான தாயார் என கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் அனுராதா பாட்வல். இவர் தமிழிலும் சில பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த கர்மா என்ற பெண் பாடகி அனுராதா தான் தனது உண்மையான தாயார் என்றும், தன்னை சிறு வயதிலேயே அவர் தத்து கொடுத்து விட்டார் என்றும், தன்னை வளர்த்த தந்தை மரணத்தின் தருவாயில் இந்த உண்மையை தன்னிடம் கூறியதாகவும் தன்னை சிறுவயதிலேயே தத்துக் கொடுத்த அனுராதா தனக்கு ரூபாய் 50 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் விளக்கமளிக்க நேரில் ஆஜராகுமாறு அனுராதா பாட்வல் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பாடகி அனுராதா பாட்வல் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது ’இது மாதிரி முட்டாள் தனமான விஷயங்கள் குறித்து எல்லாம் என்னிடம் கேள்வி கேட்காதீர்கள்’ என்று கோபமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments