விஜய் ரசிகர் மரணம்: நடிகர் அப்பானி ரவி கண்ணீர். .
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தமிழகத்தை போலவே கேரளாவிலும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி முன்னணி மலையாள நடிகர்களின் படங்களின் வசூலுக்கு இணணயான வசூலை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் கேரள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து நேற்று இரண்டாவது வார வெற்றி விழா போஸ்டர் மற்றும் பேனர்களை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரம் விஜய் ரசிகர் மன்ற தலைவர் 'லவ்டுடே'ஸ்ரீநாத் நேற்று இரவு கட்அவுட்கள் வைத்து விட்டு வீடு திரும்பும்போது பேருந்து மோதி அகால மரணம் அடைந்தார். இவரை மையமாக வைத்துதான் சமீபத்தில் 'போக்கிரி சைமன்' என்ற படம் வெளியானது. இந்த படத்தில் ஸ்ரீநாத் வேடத்தில் அப்பானி ரவி என்பவர் நடித்திருந்தார். ஸ்ரீநாத் அகால மரணம் அடைந்ததை அறிந்த அப்பானி ரவி அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, அனைவருக்கும் தகவல் தெரிவித்ததோடு, ஸ்ரீநாத் குடும்பத்தினருடன் இருந்து ஆறுதலும் உதவிகளும் அளித்து வருகிறார் .
ஸ்ரீநாத் மரணம் குறித்து அப்பான் ரவி கூறியபோது, "கடந்த மூன்று மாதங்களாக நான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் அவராகவே வாழ்ந்தேன் . அந்த கதாபாத்திரம் மேலும் என்னை புகழ் பெற செய்தது. இப்போது அவர் இல்லை. அவரது இழப்பு என்னால் தாங்க இயலவில்லை " என்று ஆழ்ந்த துக்கத்தில் கண்ணீருடன் கூறினார். மரணம் அடைந்த ஸ்ரீநாத் விஜய்யின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தி கொண்ட தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com