கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுத்த கேரளாவின் கூவத்தூர் ரிசார்ட்ஸ்

  • IndiaGlitz, [Tuesday,May 15 2018]

ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லையென்றால் எம்.எல்.ஏக்கள் கிடைக்கும் வரை இருக்கும் எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுகளில் தங்க வைக்கும் கலாச்சாரம் சமீபகாலமாக நடந்து வருகிறது. கூவத்தூரில் எம்.எல்.ஏ அடைத்து வைத்து இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்த பெருமை அதிமுகவுக்கே சாரும்

இந்த நிலையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகளின்படி எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், 104 இடங்களை கைப்பற்றிய பாஜக அவ்வளவு எளிதில் ஆட்சியை விட்டுக்கொடுக்காது. எனவே எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எங்கள் ஊர் ரிசார்ட்டுக்கு வாருங்கள் என கர்நாடக மாநில எம்.எல்.ஏக்களுக்கு கேரள சுற்றுலாத்துறை டுவிட்டரின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது. இத்தனை நாளும் தேர்தல் டென்ஷனில் இருந்த எம்.எல்.ஏக்கள் எங்கள் ஊர் ரிசார்ட்டுக்களில் தங்கி இயற்கை அழகை ரசியுங்கள் என்று கேரள சுற்றுலாத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

More News

ஊருக்குள் புகுந்து பெண்ணை தாக்கிய சிறுத்தை: அதிர்ச்சியில் பொதுமக்கள்

 வால்பாறை அருகே பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று பதுங்கியிருந்து தாக்கிய சம்பவம் அந்த பகுதி பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழப்பு

நம்மூரில் ஒருசில லட்டர்பேட் அரசியல் கட்சி தலைவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று சென்னையில் காலமானார் அவரது மறைவு தமிழ் எழுத்துலகிலும், திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் திடீர் திருப்பம்: ஆட்சி அமைக்கின்றதா காங்கிரஸ்?

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆரம்பத்தில் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தாலும் தற்போது ஆட்சி அமைக்க தேவையான 112 என்ற எண்ணிக்கையில் வெற்றி இல்லை.

பிரகாஷ்ராஜை வம்புக்கு இழுத்த பாஜக பிரமுகர்

கர்நாடக தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.