40 மணிநேரப் போராட்டம்… மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் மலையேற்றத்தின்போது மலை இடுக்கில் மாட்டிக்கொண்டு தவித்துவந்த இளைஞரை பெங்களூரைச் சேர்ந்த இராணுவ கமேண்டோ பிரிவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் 2 நாட்களாக இருந்துவந்த பதற்றம் நீங்கியுள்ளது.
கேரளாவின் மலப்புழா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் பாபு. மலையேற்றத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய 2 நண்பர்களுடன் கடந்த திங்கள்கிழமை அன்று குரும்பாச்சி மலையில் உற்சாகமாக மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மலை உச்சியை நெருங்கும்போது பாபுவின் கால் திடீரென இடறி கீழே சரிந்து விழுந்திருக்கிறார். நண்பர்கள் அவரை மீட்க முயற்சித்தபோது கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர்.
இதனால் மலப்புழாவிற்கு திரும்பிவந்து அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். இதையடுத்து மலைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாபுவைத் தேடியுள்ளனர். அவர்களாலும் பாபுவை கண்டுபிடிக்க முடியாமல் போக கடலோர காவல் படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் சேட் விமானத்தைப் பறக்கவிட்டு இளைஞர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால் மீட்க முடியாமல் தவித்துவந்த நிலையில் இராணுவத்தின் உதவியை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நாடினார்.
இதையடுத்து பெங்களூருவை சேர்ந்த இராணுவக் கமெண்டோ பிரிவினர் நேற்றிரவு குரும்பாச்சி மலைக்கு விரைந்ததோடு பாபுவை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் 41 மணிநேரமாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துவந்த பாபுவிற்கு உணவளிக்கப்பட்டது. மேலும் காலில் சிறிய சிராய்ப்பைத் தவிர அவருடைய உடலில் எந்தக் காயமும் இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
Worries have been put to rest as the young man trapped in the Cherad hill in Malampuzha has been rescued. The treatment & care needed to regain his health will be provided now. Thanks to the soldiers who led the rescue operation and everyone who provided timely support. pic.twitter.com/YAwHQOxZAP
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments