மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடப்படும்: அதிரடி முடிவால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,March 10 2020]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 44 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 9 பேர்களை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் இன்று அமைச்சரவையை கூட்டிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக உத்தரவிட்டுள்ளார் மேலும் பள்ளிகள், டியூஷன் மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் பள்ளிகள் மூடப்படுவதை அடுத்து திரை அரங்குகளும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட சினிமா அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக திரையரங்குகள் இருப்பதால் கொரோனாவை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கேரளா முழுவதும் வரும் 30ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி விஜய்யின் ‘மாஸ்டர்’ வெளியாகவிருக்கும் நிலையில் அதற்குள் கொரோனா நிலைமை சரியாகிவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்