சிறுவர் சிறுமியர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் கேம்! தீர்வு என்ன?
Wednesday, August 16, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
மனித வாழ்க்கைக்கு ஆன்லைன், இண்டர்நெட் ஆகியவை எந்த அளவுக்கு உதவி செய்கிறதோ அதே அளவுக்கு இன்னும் சொல்லப்போனால் அதற்கு மேல் உபத்திரமும் செய்கிறது. நூலகம் செல்லாமல், ஆசிரியர் இல்லாமல் பல அரிய விஷயங்களை கற்று கொடுக்கும் அதே இண்டர்நெட் தான் மோசமான விஷயங்களையும் கற்று கொடுக்கின்றது. குறிப்பாக சமீபத்தில் வெளியாகி வரும் அதிர வைக்கும் செய்திகள் புளுவேல் ஆன்லைன் கேம். இந்த விளையாட்டால் இதுவரை உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த ஆன்லைன் கேம் காரணமாக இந்திய இளைஞர்களும் பலியாகி வருகின்றனர். சமீபத்தில் கூட கேரளாவை சேர்ந்த 16 வயது சிறுவன் புளுவேல் கேம் விளையாடியதால் தூக்கு மாட்டி தொங்கி தற்கொலை செய்துள்ளான். அவனுடைய குடும்பத்தினர் கதறி அழுகின்றனர்.
அப்படி என்ன இருக்கு இந்த புளுகேம் விளையாட்டில். இந்த கேமை டவுன்லோடு செய்தவுடன் நீங்கள் நினைத்தால் கூட உடனே விளையாட முடியாது. அவர்களாகவேதான் டாஸ்க் கொடுப்பார்கள். மொத்தம் 50 நாள் டாஸ்க். 50வது நாள் தற்கொலை மரணம் என்று சொல்லியேதான் இந்த விளையாட்டை ஆர்மபிக்கின்றனர்.
இந்த 50 நாளில் ஒவ்வொரு நாளும் கொடுக்கும் டாஸ்க் பிக்பாஸ் டாஸ்க் போல் மொக்கையாக இருக்காது. கர்ண கொடூரமாக இருக்கும். உதாரணமாக பிளேடால் கையை கிழித்து கொள்ள வேண்டும். ஊசியால் குத்த வேண்டும், இதையெல்லாம் செய்து வீடியோ, புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் அடுத்த டாஸ்க் குறித்த வீடியோ வரும்
இந்த கேமுக்கு இன்றைய இளைஞர்கள் பலர் அடிமையாகி உள்ளதால் 50வது டாஸ்க்கை எட்டும் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மரணம் என்றால் என்னவென்றே தெரியாத இந்த சிறுவர்கள் மாடியில் இருந்து கீழே குதித்தும், தூக்கு மாட்டியும், நீச்சல் தெரியாதவர்கள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதுமான செய்திகள் வெளிவந்து அதிர வைக்கின்றது.
இந்த ஆன்லைன் கேமால் உண்டான ஆபத்தை தாமதமாக புரிந்து கொண்ட மத்திய அரசு உடனே புளு வேல் விளையாட்டுகளை வழங்கும் இணையதளங்களை நீக்க வேண்டும் என்று கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யாகூ மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிறப்பித்துள்ள உத்தரவில், குழந்தைகளை தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான புளு வேல் விளையாட்டு, இந்தியா உள்பட எந்த நாடுகளுக்கும் ஏற்றதல்ல என்று குறிப்பிட்டுள்ளதோடு, புளுவேல் விளையாட்டு தொடர்பான இணையதளங்களை உடனடியாக நீக்கவேண்டும் என்று அந்த நிறுவனங்களை ரவிசங்கர் பிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 16வயது சிறுவன் தற்கொலை செய்தவுடன் அதிர்ந்து போன கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்ததாவது: சிறுவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'புளூ வேல்' ஆன்லைன் விளையாட்டிற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த விளையாட்டின் மூலம், உலகம் முழுவதும், 4,000 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளதாகவும், நம் நாட்டிலும் இதன் தாக்கம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் முழுக்க முழுக்க இந்த விஷயத்தில் அரசை மட்டும் குறை கூட கூடாது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு தேவையான செல்போன், கம்ப்யூட்டர் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து தருவது மட்டும் ஒரு பெற்றோரின் கடமை அல்ல. அந்த உபகரணங்களை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்துகின்றார்களா? என்பதை கண்காணிப்பதும் அவசியம். குழந்தைகளின் பிரைவசியில் தலையிட கூடாது என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்றோர்-பிள்ளைகள் இடையே எந்தவித பிரைவசியும் தேவையில்லை.
குழந்தைகள் மனப்பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதை அவர்களிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினாலே புரிந்துவிடும். அவர்களுடைய பிரச்சனை என்ன? அதற்கு தீர்வு என்ன என்று கலந்தாலோசிதால் பல பிரச்சனைகள் பஞ்சாய் பறந்துவிடும். பத்துமாதம் பெற்று, 16 வருடங்கள் வளர்த்த அருமை குழந்தைகள் ஆன்லைன் கேமுக்கு பலியாகிவிட நாம் எந்த காரணத்தை முன்னிட்டும் இடம் கொடுத்துவிட கூடாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments