ஆன்லைன் வகுப்பில் பிரபலமான டீச்சருக்கு சினிமா வாய்ப்பு: அதன்பின் நிகழ்ந்த விபரீதம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைன் வகுப்பின் மூலம் மாநிலம் முழுவதும் பிரபலமான ஆசிரியை ஒருவருக்கு சினிமா வாய்ப்பு வந்த நிலையில் அவர் அந்த சினிமா வாய்ப்பை மறுத்ததால் ஏற்பட்ட விபரீதம் குறித்த சம்பவம் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆசிரியை சாய் ஸ்வேதா. இவர் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். அவர் பாடம் எடுக்கும் பாணி, அவருடைய அகன்ற கண்கள் மாணவர்களை மட்டுமின்றி நெட்டிசன்களையும் கவர்ந்தது. இதனையடுத்து அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குவிந்ததோடு பாராட்டுக்களும் குவிந்தது.
இந்த நிலையில் அவர் பாடம் எடுக்கும் அழகை பார்த்து அவருக்கு ஒரு சினிமா வாய்ப்பு வந்தது.ஆனால் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்த சினிமா வாய்ப்பை வேண்டாம் என கூற அவரும் தன்னிடம் சினிமா வாய்ப்பு கேட்டவரிடம் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று பதிலளித்துவிட்டார்.
இதனை அடுத்து சாய் ஸ்வேதா சினிமாவில் நடிக்க மறுத்ததை அடுத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு பதிவை செய்துள்ளார். இந்த பதிவிற்கு கண்டனம் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆசிரியை ஸ்வேதாவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஒரு பெண் தெரியாதவருக்கு கீழ்ப்படியவில்லை என்றால் அந்த பெண்ணை சமூகத்தின் மத்தியில் அவதூறாக கூறி அவமானப்படுத்துவது என்று சிலர் நினைப்பது சமீபத்திய எனது அனுபவம். படித்தவர்கள் கூட இப்படித்தான் பெண்களை நடத்துகிறார்கள். இந்த சம்பவம் என்னை முதலில் சோர்வாக்கியது. ஆனால் இப்போது நான் இதை சட்டபூர்வமாக சமாளிக்க முடிவு செய்துவிட்டேன்.
எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளேன். ஒரு ஆசிரியராக நான் செய்யும் சமூக பொறுப்பு இதுதான். இந்த பிரச்சனையில் எனக்கு கேரள மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். அடுத்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments