தாய்க்கு மறுமணம் செய்து வைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்பதை இன்னும் இந்த சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஒரு இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். இவருடைய செயலுக்கு நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் கோகுல் என்ற இளைஞர் தனது தாய், தந்தையிடம் அனுபவித்த கொடுமைகளை நேரில் கண்டவர். கோகுல் பத்தாவது படிக்கும்போது அவரது தாய் வேறு வழியின்றி கோகுலுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அந்த வயதிலேயே தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று மனதில் உறுதி பூண்டார். இதனை அவர் பலமுறை தாயிடம் கூறியபோது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோகுலில் தாய் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து ஒருவர் தனது தாயை மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார். இதனையடுத்து தாயிடம் மறுமணம் குறித்து கோகுல் பேசியுள்ளார். முதலில் மறுத்த அவர் பின்னர் மகனின் வற்புறுத்தலுக்கு பின் ஏற்றுக்கொண்டார். இந்த மறுமணம் குறித்து கோகுல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். எனது தாயாரின் மறுமணம் குறித்து இங்கு பதிவு செய்யலாமா? என பலமுறை யோசித்தேன். மறுமணம் என்பது இன்னும் பலருக்கு தடையாகவே உள்ளது. என் நீண்ட நாள் கனவு தற்போதுதான் நிறைவேறியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் பாராட்டுதல்களை குவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com