ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

  • IndiaGlitz, [Wednesday,February 02 2022]

ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு சமூக சேவை செய்த இளைஞருக்கு திடீரென ஏற்பட்ட சோதனை காரணமாக பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் குடியிருப்பு பகுதியில் எந்த இடத்தில் பாம்பு இருந்தாலும் உடனடியாக தகவல் தெரிந்தவுடன் அந்த பகுதிக்கு சென்று பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடும் சமூக சேவையை செய்து வந்தார். இதனால் பாம்புகளை கண்டால் உடனே வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பார்களோ, இல்லையோ, உடனடியாக வாவா சுரேஷுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள். இதை ஒரு சமூக சேவையாகவே சுரேஷ் செய்து வந்த நிலையில் சமீபத்தில் செங்கனாச்சேரி என்ற பகுதியில் ராஜநாகம் ஒன்று வீட்டில் புகுந்து விட்டதாக தகவல் தெரிந்தது. உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற வாவா சுரேஷை பாம்பு பிடித்து சாக்கு பையில் போடும் முயற்சியில் ஈடுபட்டார்.அப்போது எதிர்பாராத வகையில் திடீரென அந்த ராஜநாகம் சுரேஷின் தொடையில் கொத்தியது. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வாவா சுரேஷை இதற்கு முன்னர் ஒரு சில முறை பாம்பு கடித்த போதிலும் இந்த முறை அவரை கொத்தியது ராஜநாகம் என்பதால் விஷம் மிக வேகமாக ஏறியது. இதனை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் கூறியபோது சுரேஷ்க்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இருப்பினும் அவரது அவர் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்து பொது மக்களுக்காக சேவை செய்து வந்த சுரேஷ், அதே பாம்பு கடித்ததன் காரணமாக கவலைக்கிடமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.