வீட்டுக்குழாயில் வந்த மது: சினிமா காமெடி உண்மையானதால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

கலகலப்பு என்ற திரைப்படத்தில் சந்தானம் தேர்தலில் போட்டியிடும் ஒரு காட்சியில் வாக்காளர்களுக்கு குழாயில் மதுவை சப்ளை செய்வார். திரைப்படத்தில் வந்த இந்த காமெடி காட்சி கேரளாவில் உண்மையாக நடந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் சாலக்குடி என்ற இடத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் உள்ள 18 வீடுகளுக்கு குழாயில் தண்ணீருக்கு பதிலாக மதுபானம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பகுதி மக்கள் புகார் செய்தபோது காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அனைத்து வீடுகளிலும் தண்ணீருக்கு பதிலாக மது வந்ததை உறுதி செய்தவுடன் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சீல் வைத்த கலால் துறை அதிகாரிகள் அங்கு கைப்பற்றப்பட்ட 6000 லிட்டர் பீரை அருகில் உள்ள கிணறு அருகில் புதைத்து வைத்ததாகும் இந்த பீர், கிணற்றில் உள்ளதாகவும் அந்த கிணற்றில் இருந்துதான் 18 வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டுக்கு தண்ணீர் வருவதால் தண்ணீரில் பீர் கலந்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தற்காலிகமாக அந்த 18 வீட்டில் வாழும் மக்களுக்கு குடிதண்ணீர் மாற்று ஏற்பாடு செய்த அதிகாரிகள் இது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குடியிருப்பு அப்பார்ட்மெண்டில் உள்ள வீடுகளில் குடிநீருக்கு பதிலாக மது வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

பனிப்போர் - அதிபர் ட்ரம்ப்பின் உரை நகலைக் கிழித்த சபாநாயகர் நான்சி

கடந்த 2018 இல் அமெரிக்க அதிபர் டரம்ப்க்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் முக்கிய காரணமாக இருந்தவர் அந்நாட்டு சபாநயாகர் நான்சி பெலோசி

பிறந்த 30 மணி நேரத்தில் குழந்தையை தாக்கிய கொரோனா: சீனாவில் பரபரப்பு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவைரஸ் பயங்கரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கிவிட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..!

Amazon Echo Show 8 கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் எக்கோ-பிராண்டட் சாதனங்களான Echo Buds மற்றும் Echo Frames-களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் அடுத்த அதிரடி அப்டேட்!

சூர்யா நடித்து முடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

சந்தானம் நடிக்கும் அடுத்த பட டைட்டில் குறித்த தகவல்

கடந்த ஆண்டு நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை இந்த ஆண்டு அவர் நடித்த 'டகால்டி' திரைப்படம் வெளிவந்து தற்போது திரையரங்குகளில் ஓடி வருகிறது