வீட்டுக்குழாயில் வந்த மது: சினிமா காமெடி உண்மையானதால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கலகலப்பு என்ற திரைப்படத்தில் சந்தானம் தேர்தலில் போட்டியிடும் ஒரு காட்சியில் வாக்காளர்களுக்கு குழாயில் மதுவை சப்ளை செய்வார். திரைப்படத்தில் வந்த இந்த காமெடி காட்சி கேரளாவில் உண்மையாக நடந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திருச்சூர் என்ற பகுதியில் சாலக்குடி என்ற இடத்தில் உள்ள அப்பார்ட்மெண்டில் உள்ள 18 வீடுகளுக்கு குழாயில் தண்ணீருக்கு பதிலாக மதுபானம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் அந்த பகுதி மக்கள் புகார் செய்தபோது காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்போது அனைத்து வீடுகளிலும் தண்ணீருக்கு பதிலாக மது வந்ததை உறுதி செய்தவுடன் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பாருக்கு சீல் வைத்த கலால் துறை அதிகாரிகள் அங்கு கைப்பற்றப்பட்ட 6000 லிட்டர் பீரை அருகில் உள்ள கிணறு அருகில் புதைத்து வைத்ததாகும் இந்த பீர், கிணற்றில் உள்ளதாகவும் அந்த கிணற்றில் இருந்துதான் 18 வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டுக்கு தண்ணீர் வருவதால் தண்ணீரில் பீர் கலந்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தற்காலிகமாக அந்த 18 வீட்டில் வாழும் மக்களுக்கு குடிதண்ணீர் மாற்று ஏற்பாடு செய்த அதிகாரிகள் இது குறித்து கலால்துறை அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குடியிருப்பு அப்பார்ட்மெண்டில் உள்ள வீடுகளில் குடிநீருக்கு பதிலாக மது வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout