திருமணத்தை மீறிய கள்ள உறவு: போலீஸ் தற்கொலை, ஆபத்தான நிலையில் பெண்
- IndiaGlitz, [Wednesday,March 11 2020]
திருமணத்தை மீறிய கள்ள உறவு காரணமாக கேரளாவைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் அவருடைய கள்ளக் காதலியும் தற்கொலை செய்துகொள்ள எடுத்த முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவைச் சேர்ந்த போலீஸ்காரர் போஸ் என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கும் சுப்ரியா என்ற விவாகரத்தான பெண்ணுக்கும் கள்ளக் காதல் இருந்ததாக தெரிகிறது. இதனை இருவீட்டாரும் கண்டித்த போதிலும் இருவரும் தொடர்ந்து தங்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டு உள்ளனர்
இந்த நிலையில் திடீரென கடந்த 4ஆம் தேதி இருவரும் மாயமாகியதை அடுத்து அவர்களை தேடும் பணியில் அவரது குடும்பத்தினர் இருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் கன்னியாகுமாரி வந்த போஸ் மற்றும் சுப்ரியா அங்கிருந்த தனியார் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி கன்னியாகுமரியை சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் இருவரும் கையில் இருந்த பணம் காலி ஆகிவிட்டதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது
இந்த நிலையில் கன்னியாகுமரி கடற்கரை அருகே போஸ் விஷமருந்தி உயிரிழந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்த ஆவணங்களை பார்த்து அவர் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததை அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது லாட்ஜ் அறையில் சுப்ரியாவும் விஷமருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் சுப்ரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமணத்தை மீறிய உறவின் காரணமாக போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதும் அவரது கள்ளக்காதலி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது