மோசடி புகார் கொடுத்தவர் மீதே குற்றஞ்சாட்டிய சன்னிலியோன்: கேரள போலீசார் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மீது ஒருவர் மோசடி புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரை விசாரிக்க சென்ற காவல்துறையினர்களிடம் தன்மீது புகார் அளித்தவர் மீதே சன்னி லியோன் குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா சென்றிருந்த சன்னி லியோன் தற்போது குடும்பத்துடன் மீண்டும் மும்பை வந்துள்ளார். இந்த நிலையில் கேரளாவில் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அவர் வந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஷியாஸ் என்பவர் கேரள போலீசாரிடம் சன்னிலியோன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சன்னிலியோன் தன்னிடம் 29 லட்சங்களை பெற்றுக்கொண்டு ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து சன்னி லியோனிடம் கேரள போலீசார் விசாரணை நடத்தியபோது கொரோனா பரவல் காரணமாக சொன்ன தேதியில் ஷியாஸ் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் ஐந்து முறை தேதியை மாற்றி மாற்றி கொடுத்தும் அவர் அந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்தாததால் தன்னுடைய கால்ஷீட் வீணாகி விட்டதாகவும் அவர் புகார் கொடுத்தவர் மீதே குற்றச்சாட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்போது இரு தரப்பினரையும் சுமூக பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்தி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கான தேதியை அறிவித்தால் அந்த தேதியில் தான் கலந்து கொள்ள தயார் என்றும் சன்னிலியோன் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout