வெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலம், கொல்லம் அஞ்சுமூக்குப் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ஷைலா. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சொந்த வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த ஷைலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் அனீஷிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பழக்கம் எல்லை மீறியது. அதை ஷெரீப் மற்றும் ஷைலாவின் உறவினர்கள் கண்டித்தனர். ஆனால், அதை இருவரும் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் ஷைலா குறித்த தகவல் வெளிநாட்டிலிருக்கும் உமர் ஷெரீப்பிற்குத் தெரியவந்தது. உடனே, மனைவியிடம் போனில் உமர் பேசினார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அனீஷ் பழக்கத்தை ஷைலா கைவிட மறுத்தார்.இதையடுத்து, மனைவியை விவாகரத்து செய்ய ஷெரீப் முடிவு செய்தார். அதற்கான நடவடிக்கையிலும் அவர் இறங்கியதும் ஷைலாவின் மனம் மாறியது. குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதனால் மனைவியை ஷெரீப், விவாகரத்து செய்யவில்லை. ஆனால், அனீஷிடமிருந்து ஷைலாவுக்குத் தொடர்நது போன் அழைப்புகள் வந்தன. ஆனால் அதை ஷைலா தவிர்த்தார். இதனால் அனீஷிக்கு ஷைலா மீது ஆத்திரம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த புதன்கிழமை குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஷைலா பள்ளிக்குச் சென்றார். பின்னர் அவர் தனியாக வீடு திரும்பினார். அப்போது அனீஷ் அங்கு காத்திருந்தார். ஷைலாவை வழிமறித்த அனீஷ் ஏன் பேசுவதில்லை என்று கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு ஷைலா நம்முடைய பழக்கம் என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்துவிட்டன. இனி நாம் பேசவோ சந்திக்கவோ வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இது, அனீஷிக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஷைலாவைக் குத்தினார். அவரிடமிருந்து தப்பிக்க ஷைலா ஓடியிருக்கிறார். ஆனால், அவரை துரத்திச் சென்ற அனீஷ், ஆத்திரம் தீர கத்தியால் குத்திவிட்டு தப்பினார். ஷைலாவின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக அவரை மீட்டு கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஷைலாவைப் பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஷைலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கொல்லம் அரசு மருத்துவமனைக்குக் கேரள போலீஸார் அனுப்பி வைத்தனர். ஷைலாவின் கழுத்து, மார்பு, தோள் ஆகிய பகுதிகளில் 31 கத்திக்குத்துக் காயங்கள் இருந்தன. ஷைலாவைக் கொலை செய்த அனீஷை போலீஸார் பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
arul sudha
Contact at support@indiaglitz.com
Comments