உடலுறவுக்காக மனைவிகளை Exchange செய்யும் கும்பல்… பகீர் சம்பவத்தில் நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

உடலுறவுக்காக கணவன்மார்கள் தங்களது மனைவிகளை வேறொரு ஆடவனுடன் அனுப்பி வைத்துவிட்டு அந்த ஆடவனின் மனைவியோடு உல்லாசமாக இருக்கும் Partner Swapping Group தற்போது கேரளாவில் கடும் அச்சுறுத்தலாகி இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்துவரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறொரு ஆடவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறார். கடந்த 2 வருடங்களில் 9 ஆண்களுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்று காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் திருவிழா அதாவது உடலுறவுக்காக ஒரு கணவன்-மனைவி ஜோடிகள் வேறொரு கணவன்-மனைவி ஜோடியோடு சேர்ந்து கொள்ளும் பழக்கம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக சோஷியல் மீடியாவில் தனித்தனிக் குழுக்கள் இயக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெலிகிராம், மெசேன்ஞர் போன்ற சோஷியல் மீடியா குழுக்களில் பணம் கட்டி இணைந்து கொள்ளும் ஒரு ஜோடி அந்த குழுவில் உள்ள மற்ற ஜோடிகளோடு பேசிப் பழக முடியும். நாளடைவில் இந்தக் குழுக்கள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில சமயங்களில் ஒருபெண்ணுடன் 3 ஆண்கள் என குரூப் பாலியலுறவு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களைப் பெரும் கலாச்சார சீர்கேடு என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் ஹோட்டல்களை தவிர்த்து சொந்த வீடுகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் இந்த Patner swapping group இல் சில ஒற்றை ஆண்களும் இருக்கின்றனர் என்றும் அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களது மனைவிமார்களை சில ஆண்களே பாலியல் உறவில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் பாலியல் உறவுகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்ட 6 ஆண்கள் என மொத்தம் 7 பேர் கருகாச்சால் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு ஆண் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் நடக்கும் இதுபோன்ற Patner swapping group சீர்கேடுகள் பற்றி சில வழக்குகள் முன்பே பதிவாகியிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் தனது கணவர் வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்துகிறார் என்று வழக்குப் பதிவாகி இருந்தது. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு கடற்படை அதிகாரியிடம் அவருடைய மேலதிகாரிகள் மனைவிகளை மாற்றிக்கொள்ள வற்புறுத்தியதாக அந்த அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸில் இருந்து வெளியேறிய தாமரைக்கு அடுத்த வாய்ப்பு: இந்த முறை டைட்டில் நிச்சயம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களுக்கு மேலாக சிறப்பாக விளையாடிய தாமரை கடந்த ஞாயிறன்று எவிக்சன் செய்யப்பட்டார் என்பதும் அவரது வெளியேற்றும் பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை

பிரியங்காவை மெயின் டோர் வழியாக வெளியே வரச்சொன்ன பிக்பாஸ்: என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது என்பதும் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 100 வது நாளாக நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சத்யராஜ் உடல்நிலை: சிபிராஜ் டுவிட்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சத்யராஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது மகனும் நடிகருமான சிபிராஜ்

சிவாஜி, ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பாளர் எம் முத்துராமன் அவர்கள் சற்று முன் காலமானார்

சித்தார்த்தின் சர்ச்சை டுவிட்டிற்கு சாய்னா நேவால் கணவரின் நாகரீகமான பதிவு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் பதிவு செய்தல் சித்தார்த்திற்கு சாய்னா நேவால் கணவர் நாகரீகமாக பதில் அளித்துள்ளார்.