உடலுறவுக்காக மனைவிகளை Exchange செய்யும் கும்பல்… பகீர் சம்பவத்தில் நடந்தது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
உடலுறவுக்காக கணவன்மார்கள் தங்களது மனைவிகளை வேறொரு ஆடவனுடன் அனுப்பி வைத்துவிட்டு அந்த ஆடவனின் மனைவியோடு உல்லாசமாக இருக்கும் Partner Swapping Group தற்போது கேரளாவில் கடும் அச்சுறுத்தலாகி இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்துவரும் 26 வயதான இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறொரு ஆடவனுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்துகிறார். கடந்த 2 வருடங்களில் 9 ஆண்களுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தினார் என்று காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசாருக்குக் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் பகுதிகளில் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் திருவிழா அதாவது உடலுறவுக்காக ஒரு கணவன்-மனைவி ஜோடிகள் வேறொரு கணவன்-மனைவி ஜோடியோடு சேர்ந்து கொள்ளும் பழக்கம் இந்தப் பகுதிகளில் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்காக சோஷியல் மீடியாவில் தனித்தனிக் குழுக்கள் இயக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெலிகிராம், மெசேன்ஞர் போன்ற சோஷியல் மீடியா குழுக்களில் பணம் கட்டி இணைந்து கொள்ளும் ஒரு ஜோடி அந்த குழுவில் உள்ள மற்ற ஜோடிகளோடு பேசிப் பழக முடியும். நாளடைவில் இந்தக் குழுக்கள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சில சமயங்களில் ஒருபெண்ணுடன் 3 ஆண்கள் என குரூப் பாலியலுறவு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களைப் பெரும் கலாச்சார சீர்கேடு என்று மக்கள் விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் ஹோட்டல்களை தவிர்த்து சொந்த வீடுகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் இந்த Patner swapping group இல் சில ஒற்றை ஆண்களும் இருக்கின்றனர் என்றும் அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களது மனைவிமார்களை சில ஆண்களே பாலியல் உறவில் ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவருடன் பாலியல் உறவுகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்ட 6 ஆண்கள் என மொத்தம் 7 பேர் கருகாச்சால் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு ஆண் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கேரளாவில் நடக்கும் இதுபோன்ற Patner swapping group சீர்கேடுகள் பற்றி சில வழக்குகள் முன்பே பதிவாகியிருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலப்புழாவை சேர்ந்த இளம்பெண் தனது கணவர் வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்துகிறார் என்று வழக்குப் பதிவாகி இருந்தது. மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு கடற்படை அதிகாரியிடம் அவருடைய மேலதிகாரிகள் மனைவிகளை மாற்றிக்கொள்ள வற்புறுத்தியதாக அந்த அதிகாரியின் மனைவி புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com