close
Choose your channels

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கேரள பத்மநாப சுவாமி கோவில்!!! ஒளிந்து கிடக்கும் வரலாற்று ரகசியம்!!!

Tuesday, July 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கேரள பத்மநாப சுவாமி கோவில்!!! ஒளிந்து கிடக்கும் வரலாற்று ரகசியம்!!!

 

உலகிலேயே மிகவும் பணக்கார சுவாமிகளுள் ஒன்றாக திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி கருதப்படுகிறது. காரணம் அந்தக் கோவிலில் காலம் காலமாக புதையல்கள் மறைத்து வைக்கப் பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து நிலவியல் ஆய்வாளர்கள் அந்தக் கோவிலில் 6 மர்மமான அறைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்த 6 அறைகளில் 3 அறைகளை நிர்வாக வசதிக்காக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் கிட்டத்தட்ட 600 வருடங்களாக பயன்படுத்தப் படுத்தியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அதில் கொட்டிக்கிடக்கும் தங்கப் புதையல்கள் அவர்களின் கண்ணில் படாமலே இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி சிறப்பு மிக்க இந்தக் கோவிலை யார் நிர்வாகத்தில் விடுவது என்ற கேள்விதான் கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோவில் யாரால் கட்டப்பட்டது என்ற வரலாறு இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும் நாலாயிரத் திவ்ய பிரபரந்தத்தில் உள்ள நம்மாழ்வார் பாடல்களில் இந்தக் கோவிலைப் பற்றிய குறிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தக் குறிப்பை வைத்து கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்தே இந்த கோவில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பின்னர் 1686 இல் தீப்பிடித்து இந்தக் கோவில் முற்றிலும் அழிந்து விட்டது எனவும் அதை 1729 இல் திருவிதாங்கூர் மன்னர்கள் புதுப்பித்தனர் என்றும் கூறப்படுகிறது. அந்தத் தருணத்தில் இருந்து கேரள பத்மநாப கோவில் முற்றிலும் திருவிதாங்கூர் மன்னர் கட்டப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிட்டப்பட்ட இத்திருத்தலம் 108 திவ்ய தேஷங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மேலும் இக்கோவில் 100 அடி கோபுரத்தோடு 7 வரிசைகளைக் கொண்டதாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. நீருக்குள் நடுவில் அமைக்கப் பட்ட கேரளத்தின் ஒரே திருத்தலாமாகவும் இது காணப்படுகிறது. 9 ஏக்கர் என்ற பரந்த நிலப்பரப்பைக் கொண்ட இத்திருத்தலத்தின் அனைத்துக் கட்டிடமைப்புகளையும் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரே கட்டமைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மையக் கோபுரத்தைச் சுற்றி 9 கோட்டைகளும் அமைக்கப் பட்டு இருக்கின்றன. உலகத்திலேயே வேறு எங்கும் இல்லாதவாறு விஷ்ணுவின் 3 விதமான சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. நின்றவாறு, படுத்தவாறு, அமர்ந்தவாறு என்று இதன் சிலை அமைப்பும் மிகவும் வித்தியாசப்படுகிறது.

மேலும் கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் விஷ்ணுவின் சிலையில் பாம்பின் குடை மடங்கியிருக்கிறது. விஷ்ணுவின் நாபியில் இருந்து பிரம்மன் உதிக்கிறான். தன்னுடைய கையில் இருக்கும் தாமரை மலரை விண்ணு நுகர்ந்து பார்க்கிறார். இப்படி பல நுண்ணிய அம்சங்களைக் கொண்டதாக இச்சிலை காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்று சிறப்பு மிக்கதாகக் கருதப்படும் பத்மநாப சுவாமி கோவில் தற்போது மிகவும் பரபரப்பான ஒரு கோவிலாக மாறியிருக்கிறது. இத்தனை சிறப்பு மிக்க கோவிலின் நிர்வாகம் யார் கட்டப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விவாதத்திற்கு தற்போது தீர்வு கிடைத்து இருப்பதாக திருவிதாங்கூர் சமஸ்தான வாரிசுகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசாங்கத்தின்கீழ் கோவில் நிர்வாகம் ஒப்படைக்கப் பட வேண்டும் என வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011 இல் வழக்கு தொடுக்கப் பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி பத்மநாப கோவிலின் நிர்வாகமும் சொத்துகளும் கேரள அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் உச்ச நிதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2011 இல் மே 2 ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்தனர். அதோடு கர்பக்கிரகத்திற்கு அருகில் உள்ள பி கதவை மட்டும் விட்டு விட்டு மற்ற அறைகளைத் திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடுமாறு உத்தரவிட்டனர்.

இதற்காக உச்ச நீதிமன்றத்தின் சார்பில் தனிக் குழுவும் அமைக்கப் பட்டு இருந்தது. அவர்கள் கர்ப்பக் கிரகத்திற்கு அருகில் உள்ள பி கதவை மட்டும் விட்டு விட்டு ஏற்கனவே நிர்வாகத்தினர் பயன்படுத்திய 3 கதவும் மற்ற முக்கியமான 2 அறைகளில் உள்ள மொத்தத் தங்கத்தையும் அதிகாரிகள் மதிப்பிட்டனர். அப்போது வெறுமனே 2 அறைகளில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கம், வைரம், வைடூரியம், நவ ரத்தினங்கள் இருந்ததாக அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். அதுமட்டுமல்லாது 3 அடி கொண்ட பழங்கால விஷ்ணு சிலை ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த சிலை முழுவதும் நவ ரத்தினங்களால் ஆனது என்றும் கூறப்பட்டது.

பூட்டப்பட்ட 6 அறைகளைத் தவிர அக்கோவிலில் பல சுரங்கள் இருப்பதாகவும் நம்பப்பட்டது. அதுகுறித்தும் நிலவியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆபத்துக் காலத்தில் மன்னர்கள் தப்பித்து செல்வதற்காகவும், சொத்துகளை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காகவும் சுரங்கங்கள் அமைக்கப் பட்டு இருக்கலாம் என நம்பப்பட்டது. ஆனால் ஆய்வுகள் குறித்து எந்த அறிக்கையையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்கக்குடங்கள், பொற்காசுகள், கலைநயம் மிகுந்த பல பொருட்கள், இங்கிலாந்து நாணயங்கள், 1772 காலத்து முத்திரை பதித்த பெல்ஜியம் நாட்டு நாணயங்கள், ரத்தினக் கற்கள், தங்க ஒட்டியானம், தங்க யானை, தங்க சால்வைகள், உத்திராட்சை மாலைகள், நவரத்தினம் அடங்கிய மாலைகள், தங்க வைர கீரிடங்கள் எனக் குவியல் குவியலாக அந்த அறைகளில் இருந்து எடுக்கப் பட்டன. காப்பர் பிளேட், தங்கப் பிளேட், கிலோ கணக்கில் மற்ற நாட்டு நாணயங்கள் சேர, சோழ, பாண்டியர், அசோகர், நெப்போலியன் போனாபட் காலத்து தங்க நாணயம், அலெக்சாண்டர் அரசின் நாணயம், மெசப்பட்டோமியா நாணயங்கள் போன்ற அனைத்து நாணயங்களும் பத்மநாப கோவில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி வரலாற்று புகழ்ப்பெற்ற கோவிலின் சொத்துகளைத் தற்போது திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினரே நிர்வகித்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. மேலும் நிர்வாகத்திற்கு உதவியாக மாவட்ட சார்பில் 5 அதிகாரிகளை நியமிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. இதுவரை 5 அறைகளில் மட்டுமே முழுமையான சோதனை நடைபெற்று இருக்கிறது. கர்ப்பக்கிரகத்திற்கு அருகே இருக்கும் பி கதவை திறந்தால் இந்த உலகமே அழிந்து விடும் என்றும் அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர். அதோடு அந்த கதவை ஆய்வாளர்களால் திறக்க முடியாது எனவும் கூறப்படுகிறது. காரணம் கதவு திறக்கப்படும் அமைப்பிலேயே இல்லை, மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப் பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெறுமனே இரண்டு அறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்கங்கள் இதுவரை கிடைத்து இருக்கிறது. அதனால் பி கதவை திறக்கும்போது என்ன நடக்கும் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது என பல வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் கோவிலைக் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகம் அழிந்து விடும் என்ற நம்பிக்கையைத் தாண்டி ஒரு சில ஆய்வாளர்கள் இந்த அறையில் தான் கோவிலின் முக்கியச் சொத்துகள் அனைத்தும் வைக்கப் பட்டு இருக்கும். அல்லது திருவிதாங்கூர் மன்னருக்கு முன்னால் உள்ள ஆட்சியாளர்களது பொருட்கள், அக்கோவிலுக்கு முக்கியமான சொத்துகள் வைக்கப் பட்டு இருக்கலாம் எனவும் நம்புகின்றனர். அதோடு இந்தக் கதவை திறக்க யாரும் முன்வர வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கு முன்பு ஏ கதவை திறந்த சுந்தர் ராஜன் அக்கதவை திறந்து ஒரு வாரம் கழித்து இறந்து போனார். அதனால் பி கதவைத் திறப்பதும் பெரும் ஆபத்தாக முடியும் என ஆராய்ச்சியாளர்களே பயன்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment