நிபா தாக்கி உயிரிழந்த நர்ஸ்: கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் தாக்கியதால் பலியாகும் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் பொதுமக்கள் இந்த வைரஸ் தாக்கிய அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோடு என்ற பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த நர்ஸும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். லினி என்ற 31 வயது அந்த நர்ஸ், மரணத்திற்கு முன்னர் அரபு நாட்டில் இருக்கும் தனது கணவருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கேரள அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அந்த கடிதத்தில் லினி எழுதியிருந்தது இதுதான்:
:நான் உங்களை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தரமாக பிரிந்து கொண்டிருக்கிறேன். உங்களை மீண்டும் பார்ப்பேன் என்று எனக்கு தோன்றவில்லை; தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள். நம்முடைய குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களையும் உங்களுடன் அரபு நாட்டுக்கு அழைத்து சென்று விடுங்கள். நம் தந்தையை போல, அவர்கள் இங்கு தனிமையில் வாட கூடாது. அளவு கடந்த அன்புடனும், காதலுடனுமும் இதனை எழுதுகிறேன் என்றூ லினி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout